இந்தியா

கடும் நிலக்கரி பற்றாக்குறையால் மின்உற்பத்தி பாதிக்கும் அபாயம் - மத்திய அமைச்சர்கள் ஆலோசனை

கடும் நிலக்கரி பற்றாக்குறையால் மின்உற்பத்தி பாதிக்கும் அபாயம் - மத்திய அமைச்சர்கள் ஆலோசனை

Veeramani

நாட்டில் கடுமையான நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிலக்கரி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின்படி தற்போது கையிருப்பில் உள்ள நிலக்கரி அடுத்த நான்கு நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என தெரியவந்துள்ளது. இந்நிலையில், நிலக்கரி பற்றாக்குறை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மின் துறை அமைச்சர் ஆர் கே சிங் மற்றும் முக்கிய அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.