நாட்டின் அரிசி உற்பத்தி கடந்த வேளாண் ஆண்டில் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அரிசி உற்பத்தி அதிகரித்துள்ள குறித்த புள்ளிவிவரத்தை மத்திய உணவுத் துறை இணையமைச்சர் தன்வி ராவ்சாகிப் தாதாராவ் தெரிவித்துள்ளார். அதில், கடந்த வேளாண் ஆண்டில் அரிசி உற்பத்தி ஆயிரத்து 156 லட்சம் மெட்ரிக் டன் ஆக இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது. 2015-16ல் இது ஆயிரத்து 44 லட்சம் மெட்ரிக் டன்னாகவும், 2016-17ல் ஆயிரத்து 97 லட்சம் மெட்ரிக் டன்னாகவும் இருந்துள்ளது.
2017-18ல் ஆயிரத்து 127 லட்சம் மெட்ரிக் டன்னாக அரிசி உற்பத்தி உயர்ந்துள்ளதாக என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதேபோல கோதுமை உற்பத்தியும் கடந்த பயிர் ஆண்டில் முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்ததாகவும், அதே நேரம் சோளம் உள்ளிட்ட தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் உற்பத்தி சற்றே குறைந்திருந்ததாகவும் அரசு கூறியுள்ளது.