இந்தியா

திருப்பதியில் திவ்ய தரிசனத்துக்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

திருப்பதியில் திவ்ய தரிசனத்துக்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

webteam

திருப்பதி ஏழுமலையன் கோயிலில் வரும் 17ஆம் தேதி முதல் திவ்ய தரிசன பக்தர்களுக்கு கூடுதலாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைவழியில் பாத யாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. சாதாரண நாட்களில் 30ஆயிரம் பேரும், விடுமுறை நாட்களில் 45ஆயிரம் பேரும் தரிசனத்திற்காக நடந்து செல்கின்றனர். கூட்ட நெரிசலால், தரிசனத்திற்கு10 மணி நேரம் வரை அவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதனால் வரும் 17ஆம் தேதி முதல் திங்கள், செவ்வாய், புதன், வியாழக்கிழமை ஆகிய நாட்களில் பாதையாத்திரை வரும் பக்தர்களுக்கு 20ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அலிபிரியில் 15 ஆயிரம் டிக்கெட்டுகளும், ஸ்ரீவாரிமெட்டில் 5 ஆயிரம் டிக்கெட்டுகளும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் பின் வரும் பக்தர்கள் பொதுதரிசனத்திலேயே செல்ல வேண்டும் என திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.