ஒடிசா மாநிலம் பாலசோரில் விபத்து நிகழந்த இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பல மணி நேரமாக சேதமடைந்த ரயில் பெட்டிகளை கிரேன்கள், பொக்லைன் இயந்திரங்களை கொண்டு ரயில் தடத்தில் இருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்படாத வகையில் வெளிச்சத்திற்காக விளக்கு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் கிடந்த எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள், சரக்கு ரயில் பெட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து தண்டவாளங்கள் மற்றும் மின் இணைப்புகள் சீரமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் சீரமைப்பு பணிகள் முடிந்து ரயில்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த இடம் எப்படி உள்ளதெனும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பான வீடியோ செய்தியை, கட்டுரையின் மேல் இணைகப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.