கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சார்பில் அம்மாநில விவகாரங்களுக்கான அமைச்சர் ராஜேஷ், தீர்மானத்தை முன்மொழிந்தார். அதில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை பலவீனம் அடைய செய்யும் என்றும், நாடாளுமன்ற ஜனநாயகத்தை பிளவுபடுத்தும் எனவும் அவர் கூறினார்.
மேலும் இத்திட்டம் மக்களின் அதிகாரத்துக்கு எதிரானது என தெரிவித்த அமைச்சர் ராஜேஷ், ஜனநாயக உரிமைகளுக்கு சவால் விடும் வகையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
எனவே முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் பரிந்துரைக்கு அளித்த ஒப்புதலை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் அமைச்சர் ராஜேஷ் வலியுறுத்தினார். இதையடுத்து ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிராக கேரள சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.