மேற்குவங்கம்  முகநூல்
இந்தியா

தமிழ்நாட்டை தொடர்ந்து மேற்குவங்கம் சட்டப்பேரவையிலும் நீட் எதிர்ப்பு தீர்மானம்!

தமிழ்நாட்டை தொடர்ந்து மேற்குவங்கம் சட்டப்பேரவையிலும் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

PT WEB

தமிழ்நாட்டை தொடர்ந்து மேற்குவங்கம் சட்டப்பேரவையிலும் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முறைகேடு விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்துள்ளது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக மேற்குவங்கம் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

169ஆவது சட்டப்பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில், தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வுக்கு பதிலாக, மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநில அரசு நடத்தும் நுழைவுத் தேர்வை கொண்டு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

கர்நாடகா அரசும் தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. நீட் தேர்வில் விலக்கு பெற வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், மேற்குவங்க அரசு இதனை மேற்கொண்டுள்ளது.