2000 rupees  File Image
இந்தியா

“மூன்றில் இரு பங்கு 2,000 ரூபாய் தாள்கள் திரும்ப வந்துவிட்டன” - ரிசர்வ் வங்கி தகவல்

புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் தாள்களில் மூன்றில் இரு பங்குக்கும் அதிகமானவை வங்கிகள் மூலம் திரும்பி வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

PT WEB

முன்னதாக செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் 2,000 ரூபாய் தாள்களை வங்கிகளிடம் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என கடந்த மே 19 - ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், “கடந்த மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி 2,000 ரூபாய் தாள்களாக ரூ. 3,62,000 கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்தது. அதில் 2,41,000 கோடி ரூபாய் திரும்பிவந்துள்ளது. 2,000 ரூபாய் தாள்களைத் திரும்பப்பெறும் அறிவிப்பால் பொருளாதாரத்தில் எந்தப் பாதிப்பும் தென்படவில்லை” என தெரிவித்தார்.