கேரளாவில் மூணாறு நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
ராஜமலையில் உள்ள பெட்டிமுடியில் கடந்த 6 ஆம் தேதி கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கிய 82 பேரில் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ளவர்களில் 65 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போனவர்களில் ஒரு குழந்தை உள்பட 5 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கண்ணியாரு ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், தேடும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த 18 நாட்களாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வந்த தேசிய மீட்பு படைக் குழு, தீயணைப்பு வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.