இந்தியா

வீட்டு வாடகையை செலுத்தாத சோனியா காந்தி - ஆர்டிஐ பதிலில் அம்பலம்

வீட்டு வாடகையை செலுத்தாத சோனியா காந்தி - ஆர்டிஐ பதிலில் அம்பலம்

webteam

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தனது வீட்டு வாடகையை செலுத்தாமல் இருப்பது ஆர்டிஐ மனுவுக்கு அளிக்கப்பட்ட பதில் மூலமாக தெரியவந்துள்ளது.

சோனியா காந்தியின் வீட்டு வாடகை, காங்கிரஸ் தலைமை அலுவலகத்தின் வாடகை உள்ளிட்ட விவரங்களை கேட்டு, சமூக ஆர்வலர் சுஜித் படேல் என்பவர் சார்பில் ஆர்டிஐ-யின் கீழ் மனு அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு மத்திய வீட்டு வசதித் துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில், சோனியா காந்தி வசித்து வரும் எண்.10 ஜன்பத் சாலை வீட்டுக்கு ரூ.4,610 வாடகை பாக்கி இருப்பதாகவும், அந்த வீட்டுக்கு கடைசியாக கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதமே கடைசியாக வாடகை செலுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு ரூ.12 லட்சத்து 69 ஆயிரத்து 902 வாடகை பாக்கி இருப்பதாகவும், அந்த அலுவலகத்துக்கு கடைசியாக 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கடைசியாக வாடகை செலுத்தப்பட்டிருப்பதாகவும் வீட்டு வசதித் துறை அளித்த பதிலில் கூறப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, சோனியா காந்தியின் உதவியாளர் வின்சென்ட் ஜார்ஜ் வசிக்கும் அரசு பங்களாவுக்கு ரூ.5 லட்சத்து 7 ஆயிரத்து 911 வாடகை பாக்கி உள்ளதாக ஆர்டிஐ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.