passport x page
இந்தியா

பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைத்து வெளிநாட்டில் குடியேறும் இந்தியர்கள்; குஜராத் மாநிலத்தின் நிலை என்ன?

Prakash J

இந்தியர்கள் பெரும்பாலும் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் அதிகளவில் குடியேறி வருகின்றனர். இந்த நிலையில், அவர்கள் இந்திய குடியுரிமை வேண்டாம் என்று கூறி தங்கள் பாஸ்போர்ட்டை இந்திய அரசிடம் திருப்பி ஒப்படைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி, பாஸ்போர்ட்டை ஒப்படைப்பவர்களில் 30-45 வயதுவரை உள்ளவர்களே அதிகம். வேலை, வாழ்க்கைச் சூழல், உள்கட்டமைப்பு வசதிகளால் கவரப்பட்டு, இந்தியக் குடியுரிமையை அவர்கள் விட்டுக்கொடுக்கின்றனர்.

அந்த வகையில், டெல்லியைச் சேர்ந்தவர்கள்தான் பாஸ்போர்ட்டை ஒப்படைப்பதில் முதலிடத்தில் உள்ளனர். 2014-2022 வரை 60,414 பேர் பாஸ்போர்ட் ஒப்படைத்துள்ளனர். டெல்லிக்கு அடுத்து பஞ்சாப் (28,117) இரண்டாது இடத்திலும், குஜராத் (22,300 பேர்) 3வது இடத்திலும் உள்ளது. மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பாஸ்போர்ட்டை ஒப்படைத்துள்ளனர்.

இதையும் படிக்க: புனே|IAS பெண் அதிகாரி மீது விழும் குற்றச்சாட்டுகள்..பணியிட மாற்றத்திற்குப் பிறகு வெளிவரும் தகவல்கள்!

இதில், கடந்த ஆண்டில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 241 பேர் தங்களுக்கு இந்திய குடியுரிமை வேண்டாம் என்று கூறி தங்கள் பாஸ்போர்ட்டை இந்திய அரசிடம் திருப்பி ஒப்படைத்துள்ளனர். 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை 2 மடங்கு அதிகம் ஆகும்.

2022-இல் 241 பேர் தங்கள் இந்திய குடியுரிமையைக் கைவிட்டனர். நடப்பு ஆண்டு மே மாதம் வரையில் மட்டும் அம்மாநிலத்தைச் சேர்ந்த 244 பேர் தங்கள் இந்திய குடியுரிமையைக் கைவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ”மருமகள் எங்களுடன் இல்லை; NOK விதியை மாற்ற வேண்டும்” - வீரமரணம் அடைந்த கேப்டனின் பெற்றோர் கோரிக்கை!