வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியுள்ளது. மேற்குவங்கம் மற்றும் வங்க தேசம் இடையே இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளன.
இதன் ஒருபகுதியாக கொல்கத்தா விமான நிலையத்தில் சுமார் 400 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் , மேற்குவங்கத்தின் கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும் எனவும், வடக்கு ஒடிசாவில் கனமழை முதல் மிக கனமழை பெய்யுமென இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதேபோல் அசாம் மற்றும் மேகாலயாவில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும். திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மணிப்பூர், திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.