இந்தியா

ராஜஸ்தானில் மத வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் செப்டம்பர் 7 முதல் திறப்பு

ராஜஸ்தானில் மத வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் செப்டம்பர் 7 முதல் திறப்பு

Veeramani

ராஜஸ்தானில் மத வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் செப்டம்பர் 7 முதல் பக்தர்கள் வழிபாட்டிற்காக திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கோவிட் -19 தொற்று பொதுமுடக்கம் காரணமாக  ராஜஸ்தான் மாநிலத்தில் மூடப்பட்ட  அனைத்து  மத வழிபாட்டுத்தலங்களும் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் மீண்டும் பக்தர்கள் வழிபாட்டிற்காக திறக்கப்படும் என்று மாநில அரசு நேற்று தெரிவித்துள்ளது. " கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும்" என்று அரசாங்க உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது  ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  14,000 க்கும் மேல் உள்ளது.