இந்தியா

நெல்லுக்கு அதிக விலை தந்து வாங்கிய ரிலையன்ஸ் ரீடெய்ல்..

நெல்லுக்கு அதிக விலை தந்து வாங்கிய ரிலையன்ஸ் ரீடெய்ல்..

JustinDurai

கர்நாடகாவில் ரிலையன்ஸ் ரீட்டெய்ல் நிறுவனம் அதிக விலை கொடுத்து விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்துள்ளது. இதையடுத்து போட்டி அதிகரித்துள்ளதால் விவசாயிகள் தங்கள் விளைபொருளுக்கு வியாபாரிகளிடம் அதிக விலை கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் ஷிந்தனூரில் விவசாயிகளிடம் இருந்து ஒரு குவிண்டால் நெல்லை ஆயிரத்து 950 ரூபாய்க்கு ரிலையன்ஸ் ரீடெயல் நிறுவனம் இரு வாரங்களுக்கு முன் கொள்முதல் செய்துள்ளது. இது அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச கொள்முதல் விலையை விட 4.4% அதிகமாகும். இதையடுத்து விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு வியாபாரிகளிடம் அதிக விலை கோர தொடங்கியுள்ளனர்.

இதனால் விளைபொருட்களை அதிக விலை தந்து வாங்க போட்டி ஏற்பட்டுள்ளது. எனினும் இது அரசும் தனியார் நிறுவனங்களும் கையாளும் தந்திரம் என சில அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொருளுக்கு எங்கு அதிக விலை கிடைக்கிறதோ அங்கு தங்கள் பொருளை விற்பதில் தவறில்லை என விவசாய உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் உமாகாந்த் தெரிவித்தார். புதிய வேளாண் சட்டங்களால் விவசாயத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் கை ஓங்கிவிடும் என அச்சங்கள் வெளியாகியுள்ள நிலையில் இச்செய்தி வெளியாகியுள்ளது