இந்தியா

பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டால் பதவி விலகுங்கள்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் அறைகூவல்

பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டால் பதவி விலகுங்கள்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் அறைகூவல்

Veeramani

பெட்ரோல் விலையைக் குறையுங்கள் அல்லது பதவி விலகுங்கள் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அக்கட்சி எம்பி ராகுல் காந்தி, டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்துவிட்டதாக சுட்டிக்காட்டி உள்ளார். நரேந்திர மோடி அரசு பொதுமக்களை மிரட்டி வரியை பறிப்பதாக ராகுல் சாடினார். முடிந்தால் பணவீக்கத்தை குறையுங்கள் அல்லது பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்று பிரதமருக்கு ராகுல் வலியுறுத்தி உள்ளார்.

உங்கள் கார் பெட்ரோல் அல்லது டீசலில் இயங்கலாம். ஆனால், மோடி அரசு மக்களிடம் வரி வசூலித்துதான் இயங்குகிறது என ராகுல் விமர்சித்தார். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு, ஜனநாயகத்தின் வரையறையை மாற்றியிருப்பதாக குற்றஞ்சாட்டிய ராகுல் காந்தி, பணவீக்கம் எனும் தீயில் பொதுமக்களை வீசுவதன் மூலம், மோடி அரசு கடைசி வரிசையில் நிற்கும் நபரின் வருமானத்தை கசக்கி, அவர்களின் பணக்கார நண்பர்களைப் பற்றி மட்டுமே சிந்திப்பதாக ராகுல் காந்தி சாடியுள்ளார்.