இந்தியா

வன்முறையை தூண்ட சிவப்பு பை சிக்னல்: குர்மீத் மீது புகார்!

வன்முறையை தூண்ட சிவப்பு பை சிக்னல்: குர்மீத் மீது புகார்!

webteam

பாலியல் வன்கொடுமை வழக்கில் கடுங்காவல் தண்டனை பெற்றுள்ள குர்மீத் ராம் ரஹீம் சிங், தன்னுடைய ஆதரவாளர்களை எப்படி வன்முறையில் ஈடுபட தூண்டினார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர், குர்மீத் ராம் ரஹீம் சிங். தனது ஆசிரமத்தைச் சேர்ந்த 2 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அவருக்கு 20 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டபோதும், தண்டனை அறிவிக்கப்பட்டபோதும் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. இந்நிலையில் அந்த வன்முறையை குர்மீத் தூண்டச் சொல்லியதாக இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்து செல்லும் போது குர்மீத் அடம்பிடித்து, சிவப்பு நிற பையை எடுத்து சென்றிருக்கிறார். சிவப்பு நிற பையை கண்டால் வன்முறையில் ஈடுபட வேண்டும் என முன்கூட்டியே அவர் ஆதரவாளர்களிடம் கூறியிருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.