இந்தியா

ரூ.10,000 கோடி செலவில் அணைகள் புனரமைப்பு - மத்திய அரசு முடிவு

ரூ.10,000 கோடி செலவில் அணைகள் புனரமைப்பு - மத்திய அரசு முடிவு

webteam

நாடு முழுவதும் அணைகளை புனரமைக்க ரூ10 ஆயிரம் கோடி செலவிட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் நாடு முழுவதும் அணைகளை புனரமைக்க ரூ10 ஆயிரம் கோடி செலவிட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். மேலும், அணைகள் பராமரிப்பில் தீவிர கவனம் செலுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், சர்க்கரை தவிர்த்து, தானியங்கள், பருப்புகளை சணல் பைகளிலேயே மூட்டை கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது சணல் பயிரிடும் விவசாயிகள் மற்றும் சணல் பை தயாரிப்பாளர்கள் பயனடைய வாய்ப்பு எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அத்துடன், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரையில் 20% சணல் மூட்டைகளில் விநியோகம் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.