delhi, atishi x com
இந்தியா

டெல்லி CM அதிஷி வீட்டுக்கு சீல்.. குற்றஞ்சாட்டும் CM அலுவலகம்.. கேள்வியெழுப்பிய பாஜக.. காரணம் என்ன?

டெல்லி முதல்வர் அதிஷியின் அதிகாரபூர்வ இல்லத்துக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீல்வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

மதுபானக் கொள்கை வழக்கில் ஜாமீன் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால், தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய முதல்வராக அதிஷி தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றார். முதல்வராக அதிஷி பொறுப்பேற்றதையடுத்து, அவர் அரசு பங்களாவில் குடியேற இருந்தார். இந்த நிலையில், டெல்லி முதல்வர் அதிஷியின் அதிகாரபூர்வ இல்லத்துக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று, சீல்வைத்ததாகவும், அவரது வீட்டில் இருந்த உடைமைகள் அகற்றப்பட்டதாகவும் முதல்வர் அலுவலகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

delhi

இதுகுறித்து, “பிளாக் ஸ்டாப் சாலையில் அமைந்துள்ள அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லம், பாஜகவின் உத்தரவின் பேரில் வலுக்கட்டாயமாக காலி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆளுநர் வி.கே.சக்சேனா, அந்த இல்லத்தை பாஜக தலைவருக்கு ஒதுக்க விரும்புகிறார்” என முதல்வர் தரப்பு அலுவலகம் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஆளுநர் அலுவலகம் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்பட்டவில்லை.

இதையும் படிக்க; கண்ணிவெடி புதைப்பு.. கூடுதல் ராணுவம்! தென்கொரிய எல்லை நிரந்தர துண்டிப்பு.. வேகம் காட்டும் வடகொரியா!

வீடு காலியான விவரங்கள் தம் துறையின் கவனத்திற்கு வந்தபிறகே அதுகுறித்து பரிசீலிக்கும் எனவும் அத்துறை தெரிவித்துள்ளது. மேலும், “இதனால் முதல்வர் அதிஷி கவலைப்படத் தேவையில்லை. அவருக்கு விரைவில் வீடு ஒதுக்கப்படும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டைக் காலி செய்தபிறகு, முறையாக அரசு இல்லத்துக்கான சாவியை பொதுப்பணித் துறையிடம் ஒப்படைத்திருக்க வேண்டுமாம். ஆனால், அவரோ பொதுப்பணித் துறையிடம் வழங்காமல் நேரடியாக அதிஷியிடம் வழங்கியதாக பொதுப்பணித் தெரிவித்திருந்தது.

முதல்வர் வீடு சீல் வைக்கப்பட்டது குறித்து டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, “அரவிந்த் கெஜ்ரிவாலின் 'ஷீஷ் மஹால்' சீல் வைக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளிடம் இருந்து ஒப்புதல் பெறாத நிலையில் 'ஷீஷ் மஹாலில்' முதல்வர் அதிஷி எப்படி தங்கினார்? முன்னாள் முதல்வர் கெஜ்ரிவாலும், அதிஷி அந்த வீட்டில்தான் தங்க வேண்டும் என்று விரும்பினார். அந்த வீட்டில் அப்படி என்ன மறைந்துள்ளது” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிக்க: 7 முறை புதினுடன் பேசிய ட்ரம்ப்? புத்தகத்தில் வெளிவந்த புது தகவல்.. அமெரிக்க தேர்தலில் புகைச்சல்!