இந்தியா

ஓய்வுப் பெற்ற ஊழியர்களுக்கு மீண்டும் பணி - மத்திய அரசு 

ஓய்வுப் பெற்ற ஊழியர்களுக்கு மீண்டும் பணி - மத்திய அரசு 

webteam

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை மத்திய அரசு மீண்டும் பணி‌யில் அமர்த்த உள்ளது.

ரயில்வே துறை, அறிவியல் துறை, மனிதவள மேம்பாட்டுத் துறை உள்ளிட்ட அமைச்சகங்களில் முக்கிய பணிகளுக்கு ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரிகளை மீண்டும் பணிக்கு அமர்த்தப்பட இருக்கிறார்கள். இவர்கள் முழு நேர அரசு ஊழியர்களாக இல்லாமல், பகுதி நேர ஊழியர்களாக மட்டுமே கருதப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

அரசு ஊழியர்களுக்கானபடி, ஓய்வூதியம் போன்றவை இவர்களுக்கு வழக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு செலவீனங்களைக் குறைக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இத்தகைய அதிகாரிகளை எந்த முன்னறிவிப்பும் இன்றி வேலையை விட்டு நீக்கவும் நிபந்தனைகள் சேர்க்கப்பட்டுள்ளன. 

மத்திய அரசின் இந்த முடிவால் ஏராளமான அரசு பணியிடங்களில் இத்தகைய இடைக்கால அதிகாரிகள் நியமிக்கப்பட்டு முழு நேர அதிகாரிகள் பணியிடங்கள் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த இடைக்கால ஊழியர்களுக்கு முழுநேர அரசு ஊழியர்களின் பணிகள் அத்தனையும் ஒதுக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் விடுமுறை நாட்களிலும் கூடுதல் நேரத்திலும் கூட பணி செய்ய அறிவுறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தகைய பணிகளுக்கு ஏழாவது ஊதிய குழு பரிந்துரைப்படி மாதம் 55 ஆயிரம் முதல் 65 ஆயிரம் ரூபாய் ஊதியம் கொடுக்க வேண்டிய நிலையில் மாதம் 35‌ ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.