இந்தியா

புதிய 100 ரூபாய் நோட்டில் இதெல்லாம் இருக்கா?

புதிய 100 ரூபாய் நோட்டில் இதெல்லாம் இருக்கா?

rajakannan

ரிசர்வ் வங்கி கடந்த சில வருடங்களில் ரூபாய் நோட்டுகளில் தொடர்ச்சியாக மாற்றங்களை செய்து வருகிறது. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதனையடுத்து, புதிதாக 200, 50 ரூபாய் நோட்டுகள் வெளியானது. 

இந்நிலையில், புதிய 100 ரூபாய் நோட்டின் வடிவத்தை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது.

புதிய 100 ரூபாய் நோட்டின் முக்கிய அம்சங்கள்:-

  • நிறம் : பெரும்பாலும் லாவண்டர் கலரில் உள்ளது
  • வடிவம் : 66 மிமீ அகலம், 142 மிமீ
  • புதிய 100 ரூபாய் நோட்டுகள் படிப்படியாக அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்படும்
  • தற்போது புழக்கத்தில் உள்ள 100 ரூபாய் நோட்டும் செல்லும்
  • குஜராத்திலுள்ள பழம்பெரும் சின்னமான ராணி படிக்கல் கிணற்றின் படம் புதிய ரூ.100 நோட்டில் இடம் பெற்றுள்ளது. 
  • புதிய ரூ.100 தாள் பழைய 100 ரூபாய் தாளைவிட சிறியதாகவும் ரூ.10 தாளை விட சற்று பெரியதாகவும் இருக்கும். 
  • தூய்மை இந்தியா திட்டத்தின் லோகோவும், வாசகமும் இருக்கும்
  • புதிய 100 ரூபாய் நோட்டில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக்கும்