ஆர்பிஐ ட்விட்டர்
இந்தியா

”ரூ.20,000 மேல் ரொக்கமாக கடன் வழங்கக்கூடாது” - நிதி நிறுவனங்களுக்கு RBI அதிரடி உத்தரவு

Prakash J

இந்தியாவில் நிதி நிறுவனம் மற்றும் வங்கிச் சேவைகளை இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அந்த வகையில், நிதி நிறுவனங்கள் ஏதேனும் மோசடி வேலைகளில் ஈடுபட்டால், அவற்றுக்கு தடையும் விதித்து வருகின்றன. அந்த வகையில், வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு (என்பிஎஃப்சி) புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் நகைக் கடன், வணிகக் கடன் உள்ளிட்டவை வழங்கும் ஐஐஎஃப்எல் நிதி நிறுவனம் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியும், வெளிப்படைத்தன்மை இல்லாமலும் கடன் வழங்குவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்த நிறுவனம் நகைக் கடன் வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, அனைத்து வங்கியில்லா நிதி நிறுவனங்களுக்கும் ரிசர்வ் வங்கி தரப்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: என்னது! டீசல் பரோட்டா? வைரலான வீடியோ; குவிந்த கண்டனங்கள்! மன்னிப்பு கேட்ட மாஸ்டர்.. நடந்தது என்ன?

இதுகுறித்து கடந்த மே 8-ஆம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையில், “வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 269 எஸ்எஸ் விதியின்படி, ஒரு நபர் ரூ.20,000-க்கும் மேல் கடனை பணமாகப் பெற முடியாது. அதனால், வாடிக்கையாளர்களுக்கு ரூ.20,000-க்கு மேல் கடன் தொகையை ரொக்கமாக வழங்கக்கூடாது. அதேநேரத்தில், நகைக் கடனாக ரூ.20,000-க்கும் மேல் தேவைப்படுபவர்கள் தங்களின் வங்கிக் கணக்கின் மூலம் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்” என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

money

மேலும், ரொக்க பரிமாற்ற முறையில் வருமானவரித் துறையின் உத்தரவுகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று வங்கியில்லா நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்தப் புதிய உத்தரவால் நிதி நிறுவனங்கள் மட்டுமல்லாது, பல்லாயிரக்கணக்கான நடுத்தர மக்களும் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.

இதையும் படிக்க: சைவ உணவுக்கு பதில் சிக்கன் பிரியாணி டெலிவரி.. வருத்தப்பட்ட நபர்.. பதிலளித்த ஜொமாட்டோ.. #Viralvideo