இந்தியா

காதியுடன் கைகோர்க்கிறது ரேமண்ட்

காதியுடன் கைகோர்க்கிறது ரேமண்ட்

Rasus

இந்திய ஜவுளித் துறையில் முக்கிய நிறுவனமான ரேமண்ட், காதி துணிகள் விற்பனையில் இறங்குகிறது.

காதி கிராமத்தொழில் ஆணையமான KVIC உடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதத்திலிருந்து உலகம் முழுவதும் காதி ஆடைகளைக் கொண்டு செல்லும் நோக்கத்தில், காதி லேபிளுடன் தங்களது ரேமண்ட் ஆடைகளை அறிமுகம் செய்யவுள்ளது ரேமண்ட். தனியார் நிறுவனத்துடனான கூட்டுத்தொழில் அடிப்படையில் கேவிஐசியும் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

ரேமண்ட் - காதி இணைப்பு மூலமாக காதி மற்றும் கிராமத்தொழில்கள் மூலம் தயாரிக்கப்படும் காதி பொருட்கள், மற்றும் கைவினை பொருட்கள் விற்பனை, மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தும் தொடர்புகளை உருவாக்க முடியும் என கேவிஐசி தெரிவித்துள்ளது.

காதி லேபிளுடுடன் கூடிய புதிய ஆடைகள் இந்தியா முழுவதும் உள்ள ரேமண்ட் ஷோரூம்களில் கிடைக்கும். தவிர கேவிஐசி விற்பனை மையங்களிலும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து கிடைக்கும் என ரேமண்ட் தெரிவித்துள்ளது.

தரமான ரேமண்ட் காதியில் ட்ரெண்டிங் உடைகளை அறிமுகம் செய்ய இருப்பதால், காதி பயன்பாடு அதிகரிக்கும் என நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கெளதம் ஹரி கூறியுள்ளார்.