அழிவின் விளிம்பில் விலங்குகள் Freepik
இந்தியா

இந்தியாவில் அழிவின் விளிம்பில் உள்ள 11 அரிய வகை விலங்கினங்கள்!

இந்தியாவில் எண்ணற்ற விலங்கினங்கள் இருந்த நிலையில், தற்போது அதில் பாதி உயிரினங்கள் இருப்பதற்கான அடையாளமே தெரியாத அளவுக்கு ஆகிவிட்டன. இன்னும்கூட பல உயிரினங்களில் அழிவின் விளிம்பில் உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.

PT WEB

கடந்த 50 ஆண்டுகளில், இந்த பூமி மனித மக்கள்தொகை, வளர்ச்சி மற்றும் நகரமயமாதல் என பல விரைவான வளர்ச்சியை அனுபவித்தது. இதற்காக இவ்வுலகில் வாழும் விலங்குகளும் பறவைகளும், நாளுக்கு நாள் தங்களின் வாழ்விடங்களையும் உணவையும் இழந்து வருகின்றன. ஆம், நூற்றுக்கணக்கான - மில்லியன் ஏக்கர் காடுகளையும் இழக்கிறது இந்த உலகம். 2020 பகுப்பாய்வின்படி, பூமியில் வனவிலங்குகள் சில அழிவின் விளிம்பில் உள்ளன. 500க்கும் மேற்பட்ட விலங்குகள், இன்னும் 20 ஆண்டுகளில் இருந்த இடம் தெரியாமல் போகக்கூடும்.

வன உயிரினங்கள்

உலகிலேயெ அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதால், மனித செயல்பாடு மற்றும் நில மேம்பாடு இங்கு அதிகம் உள்ளன. இதனால் இந்தியாவில் அழிந்துவரும் உயிரனங்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்துள்ளது. அதில் மிகமுக்கியமான 11 விலங்கு இனங்களை, இங்கே பட்டியலிடுகிறோம்...

1. வங்கப்புலி

வங்காளப் புலிகள் உலகின் மொத்த புலிகளின் தொகையில் பாதியளவைக் கொண்டுள்ளன. அவற்றில் 70% இந்தியாவில் வாழ்கின்றன. இவை சதப்புநிலங்கள் மற்றும் ஈரநிலங்களில் வாழக்கூடுய விலங்கு என்றாலும் வெப்பம் மற்றும் குளிரை சமாளிக்கும் திறன் கொண்டவை இவை. வங்கப்பலி இப்போது 2,000-க்கும் குறைவான எண்ணிக்கையில்தான் உள்ளன.

வங்கப்புலி

2. பனிச்சிறுத்தை

ஆசிய சிங்கத்தைப் போலவே, பனிச்சிறுத்தைதகளும் ஆசியாவில் மிகப் பெரிய வாழ்விடங்களைக் கொண்டுள்ளன. தற்போது இவை ஆசியாவின் மலைத்தொடர்களில் சுற்றிக் திரிகின்றன. அந்த வகையில் இவை இப்போது லடாக், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் இமயலையின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் காணப்படுகின்றன.

பனிச்சிறுத்தை

இந்தியாவில் இவற்றின் மொத்த எண்ணிக்கையே சுமார் 500 என குறைந்துள்ளது. விலங்குகளை வேட்டையாடுதல் மற்றும் உள்நாட்டு கால்நடைகள் அதிகரிப்பு போன்றவையே இவை குறைய காரணமென சொல்லப்படுகிறது. பனிச்சிறுத்தைகள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒன்று அல்லது இரண்டு குட்டிகளை மட்டுமே பெற்றெடுக்கும் என்பதால் இதன் எண்ணிக்கையை மீட்டெப்பது கடினமாகிறது.

3. ஆசிய சிங்கம்

ஆசிய சிங்கம், ஆப்பிரிக்க சிங்கங்களைவிட அளவில் 10-20% சிறியது. இவை இந்தியாவில் இன்று கிர் தேசிய பூங்கா மற்றும் சுற்றுப்புறங்களில் மட்டுமே உள்ளது. 2010ஆம் ஆண்டு IUCN-ஆல் அழிந்துவரும் உயிரினமாக பட்டியலிடப்பட்டுள்ளது. ஏனெனில் இந்தியாவில் ஆசிய சிங்கங்கள் சுமார் 500 முதல் 650 வரை மட்டுமே உள்ளது.

ஆசிய சிங்கம்

4. ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம்:

இவை பெரும்பாலும் இந்தியாவிலும், அதிலும் இமயமலை அடிவாரத்திலும் அதிகம் காணப்படுகின்றன. பல தசாப்தங்களாக இவற்றின் கொம்புகளுக்கு வேட்டையர்கள் குறிவைத்து வருகின்றார்கள். கொம்புகளில் மருத்துவ குணங்கள் உள்ளதாக சொல்லப்படுவது அதற்கு முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது.

ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம்

5. ப்ளாக்-டக் (Blackbuck)

இப்போது இந்தியாவில் மிகவும் ஆபத்தான மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களில் இதுவும் ஒன்றாகும்.1947 இல் சுமார் 80,000 இதன் எண்ணிக்கை இருந்தது.

Blackbuck

அதன்பிறகு எத்தனையோ முயற்சி எடுத்தபோதும் இதன் எண்ணிக்கை உயரவில்லை. மேலும் தொடர்ந்து குறைந்துகொண்டும் வருகிறது.

6. சிங்கவால் மக்காக் (Lion-tailed Macaque):

தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள மலைக்காடுளில் இவை அதிகம் வாழ்கின்றன. இவை, ஏற்கெனவே குறைந்துவரும் நிலையில், அடுத்த 25 ஆண்டுகளில் இன்னும் 20% க்கும் அதிகமாக குறையும் என்று கணிக்கப்படுகிறது

Lion-tailed Macaque

7. ஒளிரும் மரத் தவளை:

இவை 2010 ஆம் ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலையின் மிக உயர்ந்த சிகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இவை மிகவும் அரிதானது. கேரளாவில் உள்ள ஆனைமுடி உச்சியில் இரவிகுளம் தேசிய பீங்காவில் மட்டுமே தற்போது காணப்படுகிறது. இவை சுமார் 300 என்ற அளவில் மட்டுமே மீதமுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஒளிரும் மரத் தவளை

8. காஷ்மீரி ரெட்ஸ்டாக் (Kashmiri Red Stag):

பல தசாப்தங்களாக IUCN ஆல் மிகவும் ஆபத்தான உயிரினமாக இது பட்டியவிடப்பட்டுள்ளது. மேலும் இந்திய அரசாங்கத்தால் அதிக பாதுகாப்பு முன்னுரிமை அளிக்கப்படும் முதல் 15 விலங்குகளில் இதுவும் ஒன்றாகும். 2015-ல் 110-130 என்றே இவை உள்ளன.

Kashmiri Red Stag

9. Nilgiri tahr:

இவற்றில் தற்போது சுமார் 2,500 - 3,000 மட்டுமே உள்ளன. பட்டியலில் உள்ள மற்ற விலங்குகளைப் போலவே, வனவிலங்கு வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பு ஆகியவை இவற்றின் எண்ணிக்கை குறைய காரணங்களாக உள்ளன என்றாலும், பருவநிலை மாற்றமும் இதற்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

Nilgiri tahr

இந்த விலங்கு மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரமான மலைப் புல்வெளிகளிலும் பாறைகளிலும் வாழ்கிறது.

10. இந்திய காட்டெருமை :

இந்திய காட்டெருமை தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு விலங்கு. வேட்டையாடப்படுதல், இறைச்சி, கொம்புகள் மற்றும் மருத்துவப் பொருட்கள், சுருங்கி வரும் வாழ்விடங்கள் மற்றும் உணவு ஆகியவற்றால் கடுமையான அச்சுறுத்தலுக்கு இவை உள்ளாகின்றன.

இந்திய காட்டெருமை

11. வெஸ்டர்ன் ட்ரகோபன் (Western Tragopan):

இவை, தற்போது உலகில் மிகவும் ஆபத்தான 25 விலங்கினங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

Western Tragopan

இந்தியாவில் இந்திய (வனவிலங்கு) பாதுகாப்பு சட்டம் 1972 இன் அட்டவணை 1 இல் இவை பட்டியலிடப்படுள்ளது.

D. ரோஷினி