இந்தியா

சோனியா காந்தி இல்லம் அருகே ராம்நாத் கோவிந்துக்கு பங்களா ஒதுக்கீடு

சோனியா காந்தி இல்லம் அருகே ராம்நாத் கோவிந்துக்கு பங்களா ஒதுக்கீடு

webteam

குடியரசுத் தலைவர் பதவி காலத்தை நிறைவு செய்துள்ள ராம்நாத் கோவிந்த் டெல்லி ஜன்பத் சாலைக்கு குடிபெயர்கிறார்.

இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராக 2017-ல் ராம்நாத் கோவிந்த் பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் நேற்றுடன் (ஜூலை 24) நிறைவடைந்த நிலையில், அவருக்கு பிரிவு உபசார விழா நடத்தி பிரதமர் மோடி, எம்.பி.க்கள், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் கலந்து கொண்டு நாடாளுமன்றத்தில் பிரியாவிடை கொடுத்தனர்.  

இந்த நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஜன்பத் சாலையில் உள்ள 12-ஆம் எண் பங்களா கோவிந்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பங்களா சோனியா காந்தி வசிக்கும் ஜன்பத் சாலையில் உள்ள பத்தாம் எண் பங்களா அருகில் உள்ளது. ராம்நாத் கோவிந்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள பங்களாவில் முன்பு காலம் சென்ற ராம்விலாஸ் பாஸ்வான்  வசித்து வந்தார்

புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரெளபதி முர்மு இன்று பதவியேற்கவுள்ளார். இந்த பதவியேற்பு விழா முடிந்தபின் நாடாளுமன்ற மைய மண்டபத்திலிருந்து ராம்நாத் கோவிந்த் தனது புதிய குடியிருப்புக்கு செல்ல உள்ளார்

குடியரசுத் தலைவர் பதவி காலத்தை நிறைவு செய்து ஓய்வு பெறும் தலைவர்களுக்கு டெல்லியில் அரசு பங்களா ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அரசு சார்பில் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளும் முன்னாள் குடியரசுத் தலைவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

இதையும் படிக்க: நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு இன்று பதவியேற்பு