ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அம்மாநில முதலமைச்சர் மெகபூபா முஃப்தியை சந்தித்தார்.
நான்கு நாள் பயணமாக ராஜ்நாத் சிங் இன்று ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ளார். பயணத்தின் முதல்கட்டமாக, முதலமைச்சர் மெகபூபா முஃப்தியை சந்தித்து, பிரதமர் மேம்பாட்டு நிதி தொடர்பாக ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையின் போது துணை முதல்வர் நிர்மல் குமார் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.80 ஆயிரம் கோடியை பிரதமர் மேம்பாட்டு நிதியில் இருந்து கடந்த 2015 ஆம் ஆண்டு அறிவித்தது. அந்த நிதியில், இதுவரை ரூ.62,599 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ராஜ்நாத் சிங் தனது நான்கு நாள் பயணத்தின் போது, பல்வேறு பிரிவினரை சார்ந்த குழுக்களுடன் சந்தித்து
ஆலோசனை நடத்துகிறார். மேலும், பாதுகாப்பு குறித்து ராணுவம் மற்றும் மத்திய ரிசர்வ் படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தான் திறந்த மனதுடன் செல்வதாகவும், காஷ்மீர் சந்தித்து வரும் பிரச்சனைக்கு தீர்வு காணும் எண்ணமுடன் வரும் அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.