இந்தியா

இந்திய தேர்தல் ஆணையராக முன்னாள் நிதிச் செயலாளர் ராஜீவ் குமார் நியமனம்!

இந்திய தேர்தல் ஆணையராக முன்னாள் நிதிச் செயலாளர் ராஜீவ் குமார் நியமனம்!

JustinDurai
அசோக் லவாசா ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அவரது இடத்துக்கு இந்திய தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
கடந்த 2018 ஜனவரியில், இந்திய தேர்தல் ஆணையராக அசோக் லவாசா நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2022 வரை உள்ளது. இந்நிலையில், ஆசிய வளர்ச்சி வங்கியின் துணை தலைவர் திவாகர் குப்தா இந்த மாதம் ஓய்வு பெறுவதை தொடர்ந்து, அந்த பதவிக்கு அசோக் லவாசா நியமிக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது.
 
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து அசோக் லவாசா ராஜினாமா செய்தார். அவர் வருகிற 31-ந் தேதியுடன் தேர்தல் கமிஷன் பணியில் இருந்து வெளியேறுகிறார். 
 
இதைத்தொடர்ந்து, அசோக் லவாசா இடத்துக்கு புதிய தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்கண்டை சேர்ந்த 1984ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ராஜீவ் குமார், மத்திய நிதித்துறை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நிதிச்சேவை செயலாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.