இந்தியா

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு ரஜினிகாந்த் கடிதம்

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு ரஜினிகாந்த் கடிதம்

PT

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குநரை நியமனம் செய்தது பாராட்டத்தக்கது என மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை தரமணியில் அமைந்துள்ள செம்மொழித் தமிழாய்வு நிறுவனமானது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முதல் இயக்குனராக இரா.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார். இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவரது ட்விட்டர் பக்கத்தில் “செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முதல் இயக்குனராக இரா.சந்திரசேகரன் அமர்த்தப்பட்டது என்பது தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான எங்கள் அர்ப்பணிப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும் இதற்கு உறுதுணையாக இருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி” எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதனை பாராட்டும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் மத்திய மனிதவள மேம்பாட்டுத் அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது “ மரியாதைக்குரிய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்களுக்கு, “தமிழ் மொழிக்காக நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கும், அர்ப்பணிப்புக்கும்,  சென்னையிலுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு இயக்குனரை பணியமர்த்தியதற்கும் எனது நன்றிகள்” என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.