இந்தியா

மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினி

மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினி

webteam

டெல்லியில் மே 30 ஆம் தேதி நடைபெற உள்ள நரேந்திர மோடியின் பிரதமர் பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கிறார். 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 351 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக மட்டுமே 303 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது. 214 தேர்தலில் பாஜக மட்டும் 282 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. 

பாஜகவின் வெற்றியை அடுத்து நடிகரும் மோடியின் நண்பருமான ரஜினி டிவிட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், மரியாதைக்குரிய மோடி அவர்களே. இதயப்பூர்வமான வாழ்த்துகள். நீங்கள் சாதித்து விட்டீர்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க. கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் பாஜக. நாடாளுமன்றக் குழுத் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.  இதைத்தொடர்ந்து பா.ஜ.க.வின் நாடாளுமன்றக் கட்சி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என்ற தகவல் அடங்கிய கடிதத்தினை ராம்நாத்திடம் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வழங்கினார். 

இதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி உரிமை கோரினார்.  அவரை ஆட்சியமைக்க குடியரசு தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.  அதன்படி 30 ஆம் தேதி நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பல்வேறு நாட்டு தலைவர்களை அழைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், நரேந்திர மோடியின் பிரதமர் பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்.