ராஜஸ்தானில் லாரி ஓட்டுநர் ஒருவரிடம் சாலை விதிகளை மீறியதாக ஒரு லட்சத்து 41 ஆயிரம் ரூபாயை போலீசார் அபராதமாக விதித்துள்ளனர்.
போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில், அதற்கான அபராத கட்டணத்தை 10 மடங்கு வரை உயர்த்தி புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டது. சாலை விதிகளை மீறுவோர் மீது தற்போது போலீசார் புதிய விதிகளின் படியே அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தானில் லாரி ஓட்டுநர் ஒருவரிடம் சாலை விதிகளை மீறியதாக ஒரு லட்சத்து 41 ஆயிரம் ரூபாயை போலீசார் அபராதமாக விதித்துள்ளனர்.
அதிக எடையை ஏற்றிச்சென்றதற்காக ரூ.1 லட்சம் அபராதமும், மற்ற விதி மீறலுக்காக 41 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்பட்டது. போலீசார் விதித்த அபராதத் தொகையை லாரி உரிமையாளர் பகவான் ராம் செலுத்தினார். அவர் அபராதம் செலுத்திய ரசீது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு ஒடிசாவில் லாரி ஓட்டுநர் ஒருவருக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.