கோத்ரா ரயில், பஜன் லால் சர்மா எக்ஸ் தளம்
இந்தியா

குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு இடம்பெற்ற பாடப்புத்தகங்களைத் திரும்பப் பெற்ற ராஜஸ்தான் பாஜக அரசு

குஜராத் கோத்ரா ரயில் விபத்து வழக்கு பற்றி எழுதப்பட்டிருந்த 4 பாடப்புத்தகங்களை ராஜஸ்தான் அரசு திரும்பப் பெற்றுள்ளது.

Prakash J

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற மதக் கலவரத்துக்குக் காரணமான கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு பாடத்தில் ஒன்றாக சேர்க்கப்பட்டிருந்தது. பாடப்புத்தகங்கள் மூலமாக வெறுப்பு பரப்பப்படுகிறது என்ற விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து அதனை திரும்பப் பெறும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில், 2002 கோத்ரா படுகொலை மற்றும் அதன் பின்விளைவுகள் பற்றிய பாடப்பகுதிகள் 9 முதல் 12 ஆம் வகுப்புகளில் இடம்பெற்றிருந்தது. இது, எதிர்வினையாற்றியதைத் தொடர்ந்து, அந்தப் புத்தகங்களை திரும்ப அனுப்புமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா, "ராஜஸ்தானில் கல்வி என்ற பெயரில் வெறுப்பு, விஷம் பரப்புதல், அநாகரிகமான மொழி கற்பித்தல் போன்றவற்றுக்கு யார் காரணம்? கல்வி அமைச்சர், அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து, 30 கோடி ரூபாய் செலவில் விதிகளுக்கு மாறாக புத்தகங்களை வாங்குகிறார். குழந்தைகள் மத்தியில் வெறுப்பை பரப்புவதற்காக பொதுமக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், ஒழுக்கக் கல்விக்குப் பதிலாக, ஒழுக்கமின்மையின் வரம்புகள் மீறப்படுகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ’என்கிட்ட பணம் இல்லை.. உங்ககிட்ட இருக்குமா’- ரத்தன் டாடாவின் எளிமையான குணம்பற்றி அமிதாப் நெகிழ்ச்சி!

"கோத்ரா ரயில் தீ விபத்தில் பயங்கரவாத சதி இல்லை. ஆனால் இது நிரூபிக்கப்படவில்லை. உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றங்கள்கூட இந்த சம்பவத்தில் பயங்கரவாத சதி இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளன. மூன்று சந்தேக நபர்கள் (ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்தவர்கள்) எந்த குற்றமும் செய்யவில்லை" என்று அரசு கூறுகிறது. ஆனால், “கரசேவகர்கள் படுகொலை செய்யப்பட்ட பிறகு, போலீசார் முகத்தை மூடிக்கொண்டு சிவில் உடையில் மாலின் பஸ்திக்குச் சென்று, அங்கிருந்த வீடுகளில் இருந்த குடும்பத்தாரிடம் எந்த விளக்கமும் அளிக்காமல் 14 இளைஞர்களைக் கைதுசெய்துள்ளனர்" எனப் பாடப்பகுதியில் உள்ள அத்தியாயம் குறிப்பிடுகிறது. இதன்காரணமாகவே அந்தப் பாடப் பகுதிகளை மறுபரிசீலனை செய்ய அரசு உத்தரவிட்டிருப்பதாகவும், அதற்காகவே அதைத் திரும்பப் பெறப்படுவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி, குஜராத்தைச் சோ்ந்த கரசேவகா்கள் அயோத்திக்குச் சென்றுவிட்டு சபா்மதி விரைவு ரயிலில் சொந்த ஊா்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். கோத்ரா ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது ‘எஸ்-6’ படுக்கை வசதி கொண்ட பெட்டிக்கு சிலா் தீ வைத்தனா். இந்த சம்பவத்தில் 59 கரசேவகா்கள் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் பரவிய வன்முறை பல இடங்களில் கட்டுக்கு அடங்காத மதக் கலவரமாக மாறியது. வன்முறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். ரயில் எரிப்பு தொடா்பான வழக்கில் குஜராத் உயா்நீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபரில் அளித்த தீா்ப்பில், 31 குற்றவாளிகளின் குற்றத்தை உறுதி செய்ததோடு 11 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது. தண்டனை குறைப்புக்கு எதிராக குஜராத் அரசும், குற்றம் உறுதி செய்யப்பட்டதற்கு எதிராக குற்றவாளிகள் சிலரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்தனா். மறுபுறம், இதே கலவரத்தில் பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை மற்றும் அவரது குடும்பத்தினா் 7 போ் கொல்லப்பட்ட வழக்கின் குற்றவாளிகள் 11 பேரை விடுவித்து குஜராத் மாநில அரசு பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரியில் ரத்து செய்து, கடுமையான விமா்சனங்களை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: “எனக்கு பயமா இருக்கு” - லாரன்ஸ் கும்பல் மிரட்டல்.. பயத்தில் அமித்ஷாவிடம் பாதுகாப்பு கேட்ட பீகார் MP!