இந்தியா

ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும்போது புகைப்படங்கள் எடுக்க ராஜஸ்தான் அரசு தடை

ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும்போது புகைப்படங்கள் எடுக்க ராஜஸ்தான் அரசு தடை

webteam

ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும்போது புகைப்படங்கள் எடுக்க ராஜஸ்தான் அரசு தடை விதித்துள்ளது

நாடு ஊரடங்கில் இருக்கும் நேரத்தில் ஆதரவற்றவர்கள் பலர் உணவின்றி தவிக்கிறார்கள். அவர்களுக்கு அரசும், தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் தன்னார்வலர்களும் உதவி செய்து வருகிறார்கள். பலர் சத்தமில்லாமல் உதவி செய்தாலும், தாங்கள் உதவி செய்வதை மற்றவர்கள் பார்த்தால் பார்ப்பவர்களுக்கும் உதவி செய்யும் எண்ணம் தோன்றலாம் என்ற நோக்கத்தோடு சிலர் புகைப்படங்கள் எடுப்பார்கள். ஆனால் தற்போது பலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு விளம்பரம் செய்துகொள்வதற்காகவே உதவி செய்வதை புகைப்படம் எடுத்து வருகிறார்கள்.

சமீபத்தில் நோயாளி ஒருவருக்கு இரண்டு வாழைப்பழங்களை 3 பேர் நின்று கொடுப்பதுபோல் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும்போது புகைப்படங்கள் எடுக்க ராஜஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள அசோக் கெலாட், ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்வது சேவையாக இருக்க வேண்டுமே தவிர, விளம்பரமாகவோ போட்டி போட்டோ செய்யக்கூடியது அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆதரவற்றவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் உதவி செய்வதை மாவட்ட ஆட்சியர்கள் ஊக்குவிக்க வேண்டும். அதேவேளையில் சரியான சமூக இடைவெளியுடன் உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.