நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு 89 தொகுதிகளில் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இதில், ராஜஸ்தானில் 13 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில், ஏற்கெனவே 12 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில பாஜக அமைச்சர் கஜேந்திர சிங், நாகௌர் மக்களவைத் தொகுதி I-N-D-I-A கூட்டணியிடம் பாஜக தோல்வியை தழுவும் எனப் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அந்த வீடியோவில், “நாங்கள் முதல்கட்ட வாக்குப்பதிவின்போது மோசமாகச் செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதி I-N-D-I-A கூட்டணியிடம் பாஜக தோல்வியைத் தழுவும். தவிர மேலும் சில இடங்களையும் இழக்கலாம்” என தெரிவித்துள்ளார். பாஜக மோசமாகச் செயல்பட்டதை அக்கட்சியைச் சேர்ந்த ஓர் அமைச்சரே ஒப்புக்கொண்டிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க: உ.பி.| பாஜக சிட்டிங் எம்பியான கணவரை எதிர்த்து களத்தில் குதித்த மனைவி!