ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் கட்டப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலையில் விமானப்படைக்கு சொந்தமான விமானத்தை தரையிறக்கும் முயற்சி வெற்றி பெற்றது.
தெபார்மரில் மூன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. விமானப்படை விமானங்கள் அவசர காலத்தில் தரையிறங்கும் வகையில் இந்த தேசிய நெடுஞ்சாலை கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் நிதின் கட்கரி ஆகியோர் திறந்து வைத்தனர். இதனை அடுத்து அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் , நிதின் கட்கரி மற்றும் விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர்கேஎஸ் பதூரியா ஆகியோருடன் விமானப்படைக்கு சொந்தமான C-130J விமானம் பறந்து வந்து வெற்றிகரமாக சாலையில் தரையிறக்கப்பட்டது.