இந்தியா

சரத்பவாரை சந்தித்த நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே

சரத்பவாரை சந்தித்த நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே

webteam

மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேன கூட்டணி ஆட்சியமைக்காவிட்டால் நாங்கள் ஆட்சியமைக்க முயல்வோம் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளர் நவாப் மாலிக் தெரிவித்திருந்தார். 

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேன கட்சி 56 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் பாரதிய ஜனதாவுக்கு சிவசேனாவின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனால் இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியும், 50 சதவிகிதம் அமைச்சர் பதவியும் தரவேண்டும் என சிவசேனா உறுதியாக உள்ளது. 

ஆனால், இந்தக் கோரிக்கைகளை நிராகரித்துள்ள பாரதிய ஜனதா, தேவேந்திர ஃபட்னாவிஸ் அடுத்த ஐந்து ஆண்டுகளும் முதல்வராக நீடிப்பார் எனக்கூறி வருகிறார். 

மகாராஷ்டிராவில் நவம்பர் 7 ஆம் தேதிக்குள் ஆட்சியமைக்காவிட்டால் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு செல்லும் என பாஜகவின் மூத்த தலைவரும் எம்பியுமான சுதிர் முங்கன்திவார் தெரிவித்துள்ளார். 
மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேன கூட்டணி ஆட்சியமைக்காவிட்டால் நாங்கள் ஆட்சியமைக்க முயல்வோம் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளர் நவாப் மாலிக் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் நவ்நிர்மான் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை சந்தித்துள்ளார். அவரது மும்பை வீட்டில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. ஏறக்குறைய 15 நிமிடங்கள் வரை இவர்கள் உரையாடி உள்ளனர். இதனால் மகாராஷ்டிர அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. 

ராஜ் தாக்ரேவின் நவ்நிர்மான் சேனா இந்த மகாராஷ்டிரா தேர்தலில் மொத்தம் 103 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் இக்கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.