இந்தியா

படேல் சிலைக்குள் மழைநீர் கசிவு?: சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ

படேல் சிலைக்குள் மழைநீர் கசிவு?: சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ

webteam

பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை வளாகத்தில்‌ மழை‌ நீர்‌ கசிவு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி 182 மீட்டர் உயரம் கொண்ட வல்லபாய் படேலின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். குஜராத் மாநிலத்தின் சர்தார் சரோவர் அணைக்கு அருகில் அமைக்கப்பட்ட அச்சிலை உலகின் உயரமான சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது. ரூ. 3 ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட வல்லபாய் படேலின் சிலை ஒற்றுமையின் சிலை என்று அழைக்கப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது குஜராத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் சிலை அமைக்கப்பட்டுள்ள வளாகத்திற்குள் மழை நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வளாகத்தில் தண்ணீர் தேங்கியிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு மழைக்கு இரையாவதாக பலரும் கண்டனங்களையும் தெரிவித்தனர். 

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிலை வளாக பராமரிப்பு அதிகாரி, சிலையில் எந்த நீர்க் கசிவும் இல்லை என்றும் மழை பெய்த போது வீசிய பலத்த காற்று காரணமாக மழைநீர் உள்ளே வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.