இந்தியா

ரயில்வே சிக்னல்களை சீரமைக்க ரூ.75 ஆயிரம் கோடி

ரயில்வே சிக்னல்களை சீரமைக்க ரூ.75 ஆயிரம் கோடி


இந்தியாவில் உள்ள ரயில்வே சிக்னல்களை சீரமைக்க ரூ.75 ஆயிரம் கோடி செலவிடப்படவுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ்
கோயல் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் கூறியதாவது " இந்தியாவில் பயணிகளுக்கு
பாதுகாப்பான ரயில் பயணத்தை உறுதி செய்ய வேண்டும். அதற்காக ஐரோப்பிய ரயில் கட்டுப்பாட்டு திட்டம் கொண்டு வரப்படவுள்ளது.
அதேபோல நாடு முழுவதும் ரயில் நிலைய வசதிகளை மேம்படுத்த ரூ.5000 கோடி செலவிடப்படவுள்ளது. மேலும் 576 கிலோ மீட்டரான
ரயில் தண்டவாளங்கள் ஜனவரி மாதம் மட்டும் மாற்றப்பட்டு, புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளது" என்று சுரேஷ் கோயல்
தெரிவித்தார். இந்திய ரயில்வேயை பொறுத்தவரை சிக்னல்கள் கோளாறுகள் ஏராளமாக இருக்கின்றது. இதனால் விரைவு ரயில் நேரங்கள்
தாமதமாகிறது. இதன் காரணமாகவே ஐரோப்பிய ரயில் கட்டுப்பாட்டு திட்டம் நடைமுறப்படுத்தப்படுவதாக ரயில்வே வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.