இந்தியா

பறவைகள் கூடு கட்டிய மரத்தை வெட்டிய ரயில்வே அதிகாரிகள் மீது வழக்கு

பறவைகள் கூடு கட்டிய மரத்தை வெட்டிய ரயில்வே அதிகாரிகள் மீது வழக்கு

webteam

பறவைகள் கூடு கட்டியிருந்த மரத்தை வெட்டியதற்காக ரயில்வே அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கேரள மாநிலம் பாலகாடு பகுதியில் ரயில்வே நிலையத்தின் முன்னால் ஒரு பெரிய குல்மொஹார் (Gulmohar tree)மரம் இருந்தது. இந்த மரத்தில் பல பறவைகள் கூடு கட்டியிருந்தன. இந்த ரயில் நிலையத்தின் முன்னால் இருந்த இந்த மரம் பார்கிங் செய்யும் இடத்தை அதிகரிக்க இடையூராக இருந்தது என்பதால் இதனை வெட்ட ரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டனர். 

இதனைத் தொடர்ந்து இந்த மரத்தை கடந்த ஒன்றாம் தேதி அன்று ரயில்வே அதிகாரிகள் வெட்டினர். அப்போது இந்த மரத்திலிருந்த பறவைகளின் முட்டைகள் கீழே உடைந்து நொறுங்கின. இது பறவைகளின் முட்டை இடும் காலம் என்பதால் இந்த மரத்தை ரயில்வே அதிகாரிகள் இடிப்பதற்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனினும் ரயில்வே அதிகாரிகள் மரத்தை வெட்டினர். இது தொடர்பாக வலயால் பகுதி வன அதிகாரி மரத்தை வெட்டிய ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த ஊழியர் ஆகியோர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.