இந்தியா

சீனியர் சிட்டிசன்களுக்கு ரயில் டிக்கெட் சலுகையில் புதிய முறை!

சீனியர் சிட்டிசன்களுக்கு ரயில் டிக்கெட் சலுகையில் புதிய முறை!

webteam

ரயில்வேக்கு ஏற்படும் இழப்பைக் குறைக்க மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் கட்டண சலுகையில் புதிய முறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ரயில்வே துறையில் டிக்கெட் சலுகை பெறுவதில், விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் என பலவகை பயணிகள் இருந்தாலும், மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டில் அதிக சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி,  ஆணாக இருந்தால், 40 சதவீதம், பெண்ணாக இருந்தால் 50 சதவீத சலுகை அளிக்கப்படுகிறது.

இந்த நடைமுறையால். ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு 1,300 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதை சமாளிக்கும் வகையில், மூத்த குடிமக்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, டிக்கெட் சலுகையில் 50 சதவீதம் சலுகை வேண்டுமா அல்லது 100 சதவீத சலுகை வேண்டுமா என்று கேட்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம், ரயில்வே துறைக்கு ஏற்படும் இழப்பு குறைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.