ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்து கிழக்கு கடற்கரை ரயில்வே செய்தி தொடர்பாளர் பிஸ்வஜித் சாகு புவேனஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது “விசாகபட்டினம் - ராயகடா பயணிகள் ரயில் சிவப்பு விளக்கு எரிவதை கண்ட பின்பும் முன்னேறிச் சென்றதால் இவ்விபத்து நேர்ந்தது” என அவர் தெரிவித்தார். விபத்துக்குள்ளான இரு ரயில்களிலும் சுமார் 100 பயணிகள் இருந்ததாகவும் பிஸ்வஜித் சாகு தெரிவித்தார்.
இதற்கிடையே விபத்து நடந்த பகுதி ஒடிசாவிற்கு அருகில் உள்ளதால் மீட்பு பணிகளில் உதவுமாறு முதலமைச்சர் நவீன் பட்நாயக் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஒடிசாவின் ராயகடா மற்றும் கோராபுட் மாவட்ட ஆட்சியர்களும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டனர்