இந்தியா

“வெறுப்பை கைவிடுங்கள்... சமூக வலைத்தளங்களை அல்ல” - மோடிக்கு ராகுல் அட்வைஸ்

“வெறுப்பை கைவிடுங்கள்... சமூக வலைத்தளங்களை அல்ல” - மோடிக்கு ராகுல் அட்வைஸ்

webteam

வெறுப்பை கைவிடுங்கள் சமூக வலைத்தள கணக்குகளை அல்ல என பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி அட்வைஸ் செய்துள்ளார்.

மற்ற அரசியல் கட்சி தலைவர்களை காட்டிலும் மோடி பிரதமராக பதவியேற்றது முதல் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் மோடியை கோடிக்கணக்கானோர் பின்பற்றி வருகின்றனர். 80 மில்லியன் பேர் மோடியை பின்பற்றுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமராக அவர் பதவியேற்ற போது டிஜிட்டல் மீடியா அதிகமாக பரவியிருந்தது. டிவிட்டரில் பல்வேறு கருத்துக்களையும் மோடி அடிக்கடி தெரிவித்து வருகின்றார்.

இதைத்தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற நினைக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “இந்த ஞாயிற்று கிழமை, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மோடியின் ட்விட்டிற்கு, வெறுப்பை கைவிடுங்கள் சமூக வலைதள கணக்குகளை அல்ல என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி அட்வைஸ் செய்துள்ளார். இதனிடையே, பிரதமர் மோடி சமூக வலைத்தளங்களில் இருந்து விலகக் கூடாது என்பதை தெரிவிக்கும் வகையில் #NoSir என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. இதில் பலரும் மோடிக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.