இந்தியா

மனிதனைப் போல் சிந்திக்கும் ரோபோ : தகவலறிகிறார் ராகுல்

webteam

மனிதனைப் போன்று சிந்திக்கும் இயந்திரங்களின் உருவாக்கம் பற்றி அறிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி வரும் 9ஆம் தேதி அமெரிக்கா செல்லவுள்ளார்.

சமீப காலமாக அறிவியல் தொழில்நுட்பங்களைப் பற்றி அறிவதில் ராகுல் காந்தி ஆர்வம்காட்டி வருகிறார். அதன்படி பயோ டெக்னாலாஜி தொடர்பாக தெரிந்துகொள்வதற்காக அண்மையில் நார்வே சென்று வந்தார். இந்நிலையில் மனிதனைப் போன்று சிந்திக்கும் இயந்திரங்களின் உருவாக்கம் பற்றிய அறிவியல் தொழில்நுட்பங்களை அறிவதற்காக, ஒருவார பயணமாக அமெரிக்கா செல்கிறார்.

அமெரிக்காவில் மனிதர்களைப் போல சிந்திக்கும் இயந்திரங்களை அந்நாட்டு விஞ்ஞானிகளும், கனடாவின் பேராசிரியர்களும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கியுள்ளனர். இந்த இயந்திரங்கள் மனிதர்களின் மொழி, அசைவுகள், கட்டளைகள் மற்றும் நடமுறைகளை புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். எனவே இதுபோன்ற இயந்திரங்களின் தன்மையை அறிந்து அதனை இந்தியாவிலும் பலதுறைகளில் பயன்படுத்தும் திட்டம் ராகுல் காந்திக்கு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 குறிப்பாக இந்தியாவின் பல பகுதிகளில் இதுவரையிலும் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்வது, வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்வது போன்ற அபாயகர பணிகளை மனிதர்களே மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.