சுதந்தரதின விழா நிகழ்ச்சியில் ராகுல்காந்தி கடைசி வரிசைக்கு முந்தைய வரிசையில் அமரவைக்கப்பட்டிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா ஸ்ரீநேட்டே, “சின்ன புத்தி கொண்டவர்களிடமிருந்து பெரிய விஷயங்களை எதிர்பார்க்கமுடியாது” என கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவருக்கு கேபினட் அமைச்சருக்கு இணையான அந்தஸ்து உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள சுப்ரியா, “கேபினட் அமைச்சர்கள் முன் வரிசையில் அமரவைக்கப்பட்டபோது ராகுல் காந்தி பின்வரிசையில் அமரவைக்கப்பட்டது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
“ராகுல் காந்தியை பொறுத்தவரை அவரை எங்கே அமரவைத்தாலும் அவருக்கு ஒன்றுதான். அவர் மக்கள் தலைவர்” எனக் குறிப்பிட்டுள்ளார் சுப்ரியா ஸ்ரீநேட்டே.
காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்துள்ள பாதுகாப்புத்துறை, “ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முன்னிருக்கைகளில் இடம் ஒதுக்கப்படவேண்டியிருந்ததால் ராகுல் காந்தி பின் வரிசையில் அமரவைக்கப்பட்டார்” எனக் கூறியுள்ளது.