ஹத்ராஸ் சம்பவம் - ராகுல் காந்தி ஆறுதல் ட்விட்டர்
இந்தியா

ஹத்ராஸ் | கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களை சந்தித்து, ராகுல் காந்தி ஆறுதல்

உத்தரபிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தில் சொற்பொழிவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் ஆறுதல் கூறினார்.

PT WEB

உத்தரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் அருகே ஃபுல் ராய் பகுதியில், ஆன்மிக சொற்பொழிவாளர் போலோ பாபா நடத்திய சொற்பொழிவை கேட்க ஒரே இடத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 120க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உயிரிழந்தோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதற்காக டெல்லியில் இருந்து சாலை வழியாக ஹத்ராஸ் சென்றடைந்தார். விபவ் நகர், அலிகார் உள்ளிட்ட பகுதிகளில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது, காங்கிரஸ் கட்சி சார்பில் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக ராகுல் காந்தி உறுதி அளித்தார்