பிரதமர் மோடி, ராகுல்காந்தி pt web
இந்தியா

“பிரதமர் நரேந்திர மோடி அதிர்ஷ்டமில்லாதவர்” - ராகுல் காந்தியின் பேச்சால் சர்ச்சை

பிரதமர் நரேந்திர மோடி அதிர்ஷடமில்லாதவர் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

webteam

ராஜஸ்தானின் வல்லப் நகர் மற்றும் பேடூ பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட ராகுல் காந்தி, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை சுட்டிக்காட்டி பேசினார். அப்போது துரதிருஷ்டத்துடன் தொடர்புடைய பனொடி என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார்.

india team

மோடி தொலைக்காட்சியில் தோன்றி இந்து - முஸ்லீம் என பேசுவதாகவும், சில நேரங்களில் ஒரு கிரிக்கெட் போட்டியை காண செல்கிறார் என்றும் கூறினார். ஆனால் அந்த போட்டியில் கிடைத்தது தோல்வி என்பது வேறு விஷயம் என்றும், துரதிருஷ்டம் எனவும் ராகுல் காந்தி கூறினார். "பிஎம் மோடி என்றால் பனொடி மோடி என அர்த்தம்" எனவும் ராகுல் காந்தி விமர்சித்தார்.

ராகுல் காந்தியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சி, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ராகுல் காந்தியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர்பிரசாத், காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோல்வியடையும் என்ற விரக்தியில் ராகுல் காந்தி பேசுவதாக தெரிவித்தார். ராகுல் காந்தி இதுதொடர்பாக மன்னிப்பு கோராவிட்டால் பிரச்னை தீவிரமடையும் எனவும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Modi - Rahul Gandhi

கடந்த ஞாயிறன்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. அகமதாபாத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற போட்டியை பிரதமர் நேரில் பார்த்து ரசித்தார். இந்திய அணி தோல்வி அடைந்தது முதலே பனொடி என்ற வார்த்தை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வந்தது.