ராகுல், மோடி எக்ஸ் தளம்
இந்தியா

“பிரதமர் மோடியை ஒருபோதும் நான் வெறுத்ததில்லை” - ராகுல்காந்தி

பிரதமர் மோடியை ஒருபோதும் தான் வெறுத்தது இல்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

webteam

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, மாணவர்கள், ஊடகவியலாளர்கள், தொழிலதிபர்களை சந்தித்து பேசி வருகிறார். டல்லஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் பேசிய ராகுல்காந்தி, இந்தியாவிற்கு எதிராக கருத்துகளை கூறியதாக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

rahul gandhi

இந்நிலையில், ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தில் நடந்த கலந்துரையாடலின் போது, பிரதமர் மோடி மீது வெறுப்புணர்வு இருக்கிறதா என ராகுல்காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “பிரதமர் மோடியை வெறுக்கவில்லை. அவருக்கென ஒரு கண்ணோட்டம் உள்ளது. அவருடைய அந்த கண்ணோட்டத்தில், கருத்தில் நான் உடன்படவில்லை” என கூறியுள்ளார்.

இருவருக்குமான கண்ணோட்டம் மாறுபட்டது என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்தியாவில் தேர்தல் நேர்மையாக நடந்திருந்தால் பாஜகவால் 240 இடங்களை கைப்பற்றி இருக்க முடியாது. இந்தியாவில் அனைவருக்குமான சமவாய்ப்பு இல்லாததால், இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. அவ்வாறான சூழல் இந்தியாவில் ஏற்பட்டால் இடஒதுக்கீடு முறை அவசியமில்லை” என ராகுல்காந்தி பேசினார்.