ராகுல் காந்தி - நரேந்திர மோடி File image
இந்தியா

“நாட்டின் எதிர்காலத்திற்கு எதிராக உள்ள நரேந்திர மோடியை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது” - ராகுல் காந்தி

நரேந்திர மோடியின் அரசு நாட்டின் எதிர்காலத்திற்கு எதிராக உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

webteam

பிரதமர் நரேந்திர மோடியின் அரசு நாட்டின் எதிர்காலத்திற்கு எதிராக உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டின் சில இடங்களில் மாணவர்கள் வினாத்தாள் கசிவால் விரக்தியடைந்துள்ளனர். சில இடங்களில் தங்களின் குரலை உயர்த்தியதற்காக தடியடிக்கு ஆளாகியுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “காவல்துறை ஆட்சேர்ப்பில் இருந்து ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு வரை சிறிய அளவிலான தேர்வுகளை கூட பாஜக அரசால் நியாயமாக நடத்த முடியவில்லை. இது இளைஞர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Modi - Rahul Gandhi

வேலையை உருவாக்கும் நிறுவனங்களை தனது நண்பர்களுக்கு விற்றுவிட்டு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை வேலைக்கு அமர்த்துவதே மோடி அரசின் கொள்கை. மாணவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் கனவை அலட்சியப்படுத்தி, அவர்களின் நம்பிக்கையை மோடி அரசு பறித்து விட்டது. நரேந்திர மோடியை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.