நாடு முழுவதும் அச்சம் நிறைந்த சூழல் நிலவுவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாரதிய ஜனதாவும், ஆர்எஸ்எஸ்ஸும் சேர்ந்து இந்தியாவில் ஒவ்வோரு ஜனநாயக அமைப்பையும் தங்கள் பிடிக்குள் கொண்டு வந்து கொண்டிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, அரசியல் சட்டம் மிகப்பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் சாடினார். பாகிஸ்தானில்தான் இப்படியெல்லாம் நடக்கும் என்றும் ராகுல் குற்றம்சாட்டினார்.
முன்னதாக ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், பெரும்பான்மை இல்லாமலேயே கர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பது ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்குவதாக குறிப்பிட்டிருந்தார். இன்றைய பொழுதில் பாரதிய ஜனதா வெற்றிக் கொண்டாட்டத்தில் திளைக்கும் போது, ஜனநாயக தோல்வியை நினைத்து நாடே துக்கத்தில் ஆழ்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.