மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் மீது ஜிஎஸ்டி வரி விதிப்பதா? என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்துப்பேசிய அவர், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வீல்சேர், பிரெய்லி டைப்ரைட்டர் போன்ற உபகரணங்களுக்கும் ஜி.எஸ்.டி.யில் வரிவிதித்திருப்பதன் மூலம், மத்திய அரசு உணர்வற்ற நிலையில் இருப்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஜி.எஸ்.டி. வரியை முழுவதும் திரும்பப் பெற வேண்டும்.வரி விதிப்பால் லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு மேலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்தார்.