இந்தியா

அனைத்து மத பூஜைகளுக்கு பின் இந்திய விமானப்படையில் முறைப்படி இணைந்தது ரஃபேல் !

அனைத்து மத பூஜைகளுக்கு பின் இந்திய விமானப்படையில் முறைப்படி இணைந்தது ரஃபேல் !

jagadeesh

ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் இன்று முறைப்படி இணைக்கப்பட்டன. அம்பாலா விமானப்படைத் தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், இந்திய - பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்திய விமானப்படையின் போர்த்திறனை மேம்படுத்தும் விதமாக பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து 36 ரபேல் ரக விமானங்களை வாங்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, அதில் 5 விமானங்கள் கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி, இ்ந்தியாவுக்கு வந்து சேர்ந்தன.

ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படைத்தளத்திற்கு வந்தடைந்த அந்த போர் விமானங்கள், இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டுவிட்டன. அவற்றை முறைப்படி விமானப்படையில் இணைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஃபிளாரன்ஸ் பார்லி, ‌முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், பாதுகாப்புத்துறைச் செயலாளர் அஜய் குமார், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் ஜி சதீஷ் ரெட்டி உள்ளிட்ட பலர் இவ்விழாவில் பங்கேற்றனர். முன்னதாக ரஃபேல் விமானங்கள் இணைக்கப்படுவதற்கு முன், அனைத்து மத முறைப்படி விமானங்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டன.