இந்தியா

’’போதும் மகனே, வா வீட்டுக்கு...’’: ராப்ரி தேவி உருக்கம்

’’போதும் மகனே, வா வீட்டுக்கு...’’: ராப்ரி தேவி உருக்கம்

webteam

’’வீட்டை விட்டு வெளியே வசித்தது போதும், வீட்டுக்கு வா மகனே’’ என்று பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் ராப்ரி தேவி, தன் மகன் தேஜ் பிரதாப்புக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும் பீகார் மாநில முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவுக்கு தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் என இரண்டு மகன்கள். ஏழு மகள்கள். மகன்களுக்குள் கருத்து வேறுபாடு. கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள லாலு பிரசாத் யாதவ், உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் தேஜ்பிரதாப் யாதவுக்கும், பிகார் எம்எல்ஏ சந்திரிகாவின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த ஆண்டு, மே மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து 6 மாதங்கள் ஆன நிலையில் விவகாரத்து கோரி, தேஜ் பிரதாப் யாதவ் வழக்கு தொடர்ந்துள்ளார். மனைவிக்கும் தனக்கும் மனப் பொருத்தம் இல்லை என்று அவர் காரணம் கூறியுள்ளார்.

இதையடுத்து வீட்டில் இருந்து வெளியேறி தனியாக வசித்து வரும் அவர், கடந்த சில நாட்களுக்கு முன் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியிலி ருந்து விலகினார். மக்களவைத் தேர்தலில் தனது ஆதரவாளர்களுக்கு சில தொகுதிகளை, தம்பியிடம் கேட்டதாகவும் அவர் கொடுக்காததால், கட்சியில் இருந்து விலகியதாகவும் கூறப்பட்டது.

பின், ‘லாலு ராப்ரீ மோர்சா’ என்ற புதிய கட்சியை அவர் தொடங்கினார். “என் தம்பி தேஜஸ்வியை சுற்றி இருப்பவர்கள் அவரை எனக்கு எதிராகச் செயல்பட வைக்கிறார்கள்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தேஜ் பிரதாப்பின் அம்மாவும் பீகார் மாநில முன்னாள் முதலமைச்சருமான ராப்ரி தேவி மகனுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் கூறும்போது, ‘எனது மகன்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. நான் தினமும் தேஜ் பிரதாப்பிடம் போனில் பேசிக்கொண்டுதான் இருக்கி றேன். சில அரசியல் எதிரிகள் என் மகனுக்குத் தவறான ஆலோசனையை சொல்லி, பிரிக்கப் பார்க்கிறார்கள். இதற்கு பின்னணியில் ஐக்கிய ஜன தா தளக் கட்சியும் பாஜகவும் இருப்பதாக நினைக்கிறேன்’’ என்ற ராப்ரி தேவி, மகனுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதில், ‘’வீட்டை விட்டு வெளி யேறி தனியாக வசிப்பது போதும் மகனே. விரைவில் திரும்பி வா’’ என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.