ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் pt web
இந்தியா

டாடா என்பதன் பொருள் என்ன? ரத்தன் டாடாவே ஆர்வமுடன் கேட்ட வரலாறு... பகிர்கிறார் ஆர். பாலகிருஷ்ணன்!

டாடா என்பது ஈரானில் ஓர் ஊரின் பெயர் என வரலாற்று ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

PT WEB

டாடா என்பது ஈரானில் ஓர் ஊரின் பெயர் என வரலாற்று ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

ரத்தன் டாடா

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் நினைவாக, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், டாடா என்ற பெயர் குறித்து விவரித்துள்ளார். அதில், “பார்சி மதத்தைச் சேர்ந்தவர் டாடா. பாரசீகத்திலிருந்து இந்தியாவிக்கு பார்சி மக்கள் புலம்பெயர்ந்து வந்தவர்கள் என்பது வரலாற்று உண்மை” என்று குறிப்பிட்டுள்ளார்.

டாடா, நாரிமன், போர்ஜி, நெளரோஜி உள்ளிட்ட பெயர்கள், ஈரானில் உள்ள இடங்களின் பெயர்களோடு ஒப்பிடத்தக்கவை என்று குறிப்பிட்டுள்ள ஆர்.பாலகிருஷ்ணன், “ஒரு நிலப்பகுதியின் இடப்பெயர்கள், புலம்பெயரும் மனிதர்களின் கூடவே பயணித்து, புதிய நிலப்பகுதிகளில் மீண்டும் இடப் பெயர்களாக அல்லது குடும்ப பெயர்களாக மாறிவிடுவதற்கு ‘டாடா’ கண்கூடான எடுத்துக்காட்டு” என தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் பணி சார்ந்த நிகழ்வுகளின்போது, தமது தரவுகள் குறித்து ரத்தன் டாடாவிடம் கூறியதாகவும், அவர் ஆர்வமுடன் அதை கேட்டதாகவும் எழுத்தாளர் ஆர். பாலகிருஷ்ணன் நினைவு கூர்ந்துள்ளார்.

ஆர்.பாலகிருஷ்ணனின் அப்பதிவை, இங்கே காணலாம்...